உதயநேரம் வாருங்கள்! உன்னதர் பாதம் தேடுங்கள்!
பணிந்து குனிந்து வாழ்த்துங்கள்! பரமனின் புகழ் பாடுங்கள்!
1.
பாடுகள் நிறைந்த உலகினில் தேவனின் திருமுக தரிசனம்
அலையினில் அமைதி தந்திடும் ஆத்தும வலிமை அளித்திடும் – உதயநேரம்
2.
இயேசுவைக் கண்ட மனிதனே தேவையின் தரிசனம் காண்பவன்
தேவனின் சத்தம் கேட்பவன் தேவனின் சித்தம் செய்பவன் – உதயநேரம்
3.
தேவனோடு தினம் தனிமையில் வாழ்ந்து பழகிய உள்ளமே
ஐக்கிய வாழ்வில் ஜெயம்பெறும் கோபுர சாதனை புரிந்திடும் – உதயநேரம்
udhaya neram varungkal! unnadhar badham thedungkal!
paninththu kuninththu vazhththungkal! paramanin bukazh badungkal!
1.
badukal nirainthdha ulakinil thevanin thirumuka dharichanam
alaiyinil amaithi dhanththidum aaththuma valimai aliththidum – udhaya neram
2.
iyesuvaik kanta manidhane thevaiyin dharisanam kanpavan
thevanin sathdham kedpavan thevanin sithdham seypavan – udhaya neram
3.
thevanodu thinam dhanimaiyil vazhnththu pazhakiya ullame
aikkiya vazhvil jayamberum kobura sadhanai burinththidum – udhaya neram